உடனடி ஜனாதிபதித் தேர்தல் குறித்து மூடிய அறைக்குள் மந்திராலோசனை!
13 view
உள்ளூராட்சி சபைத் தேர்தலை அப்படியே ஒத்திவைத்துவிட்டு உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது பற்றி மந்திராலோசனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன எம்.பி., ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகிய மூவரும் ஒன்றிணைந்தே இது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் வேறு எவரும் கலந்துகொள்ளவில்லை. மூடிய அறைக்குள்ளேயே ஆலோசனை இடம்பெற்றுள்ளது. இந்த ஆலோசனையை முதலில் சமர்ப்பித்தவர் வஜிர அபேவர்தன. அப்படி உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் அதை எவ்வாறு வெற்றிகொள்வது என்ற வழிகள் சிலவற்றையும் அவர் பஸிலிடம் விளக்கிக் கூறியுள்ளார். நான்கு வருடங்கள் நிறைவில் ஜனாதிபதி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். அவசரம் ஏற்பட்டால் அடுத்த வருடம் நடுப்பகுதியில் தேர்தலை நடத்தலாம். இதை வைத்துக்கொண்டு வேறு எந்தத் தேர்தலையும் நடத்தாது அடுத்த வருடம் நடுப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோம் என்று வஜிர அங்கு கூறினார்.…
The post உடனடி ஜனாதிபதித் தேர்தல் குறித்து மூடிய அறைக்குள் மந்திராலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடனடி ஜனாதிபதித் தேர்தல் குறித்து மூடிய அறைக்குள் மந்திராலோசனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
