பல காலமாக இழுபறியில் இருந்த தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினைக்கு தீர்வு!
16 view
பல காலமாக இழுபறியில் இருந்த தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளமை நல்லதொரு விடயமாகும். இது பற்றி அவர் இன்று (25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்து ள்ளதாவது, பல காலமாக இழுபறியில் இருந்த தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை என்பது அதனை வேறிடத்துக்கு மாற்றி புதிய காணியில் புதிதாக அமைக்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளமை நல்லதொரு விடயமாகும். தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை 2012ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. அப் பள்ளிவாயல் புனித பூமிக்குள் இருப்பதால் அதற்கு வேறு காணி தருகிறோம் அங்கு மாற்றுங்கள் என பௌத்த தேரர்களால் சொல்லப்பட்டது. பள்ளியை மாற்ற இடமளிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் உறுதிபட தெரிவித்தது. அப்போது ரவூப் ஹக்கீம், அதாவுள்ளா, ரிசாத் பதியுதீன் ஆகியோர் மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்தனர். இவர்களில் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் இப்பிரச்சினையை…
The post பல காலமாக இழுபறியில் இருந்த தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினைக்கு தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல காலமாக இழுபறியில் இருந்த தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினைக்கு தீர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
