சங்கானை, மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலைவிழா!

10 view
சங்கானை இந்து இளைஞர் மன்றத்தினர் நடத்திய மாபெரும் கலைவிழா இன்றையதினம் (25) மன்றத்தின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. மன்றத்தின் தலைவர் யோ.பிரசாந்தன் அவர்கள் தலைமை தாங்கிய இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர். விருந்தினர்கள் கலாச்சார முறைப்படி ,சிறுவர்களின் குதிரையாட்டம் மற்றும் மயிலாட்டத்துடன் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதன்பின்னர் கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் மாவடி இந்து இளைஞர் மன்றத்தினர், கலைஞர்கள், சங்கானை பிரதேச செயலகத்தினர், சமூகமட்ட அமைப்பினர், கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
The post சங்கானை, மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலைவிழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース