போர்த்துக்கேயர் கால சுரங்கப்பாதையை தேடிச்சென்ற அமைச்சர்
8 view
கோட்டை இராச்சியத்தில் இருந்து ஜாவத்த மயாணத்திற்கு உள்ளே அமைந்துள்ள இடத்தில் அக்காலத்தில் சுரங்கப்பாதையொன்று காணப்பட்டதாக கூறப்படுகின்றது. அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அண்மையில் குறித்த இடத்தை சென்று பார்வையிட்டுள்ளார். போர்த்துக்கேயர் காலத்தில் காயமடைந்த போர்த்துக்கேயர்களை குணப்படுத்த இங்குள்ள கிணற்றில் இருந்து புனித நீர் பெறப்பட்டதாகவும், அதற்காக கோட்டை இராச்சியத்திலிருந்து சுரங்கப்பாதை மூலம் நீர் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் தற்போது ஜாவத்த தகன அறைக்குள் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post போர்த்துக்கேயர் கால சுரங்கப்பாதையை தேடிச்சென்ற அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர்த்துக்கேயர் கால சுரங்கப்பாதையை தேடிச்சென்ற அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
