வெள்ளத்தில் மூழ்கியது கண்டி ரயில் நிலையம்! சேவைகளும் பாதிப்பு
9 view
கடந்த சில மணித்தியாலங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக கண்டி தொடரூந்து நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் தொடரூந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (24) தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது, கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து வட கிழக்காக 110km தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது. இது இன்று மதியம் தென்மேற்கு திசையாக நகர்ந்து திருகோணமலை பிரதேசத்தின் ஊடாக இலங்கையை ஊடறுத்து சென்று, நாளை காலை கன்னியாகுமரியின் கொமோரின் பிரதேசத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 45 முதல் 55 வரை காணப்படுவதுடன் (காற்றின் வேகமானது 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும்) கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் நாளை மறுதினம் முதல் கடலின் கொந்தளிப்பு படிப்படியாக குறைவடையும். இதேவேளை,…
The post வெள்ளத்தில் மூழ்கியது கண்டி ரயில் நிலையம்! சேவைகளும் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தில் மூழ்கியது கண்டி ரயில் நிலையம்! சேவைகளும் பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
