கல்முனை கடற்கரை பள்ளியின் 201வது கொடியேற்ற விழா ஆரம்பம்!
6 view
நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 201 வது கொடியேற்று விழா சனிக்கிழமை மாலை (24)ஆரம்பமானது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ். எம். ஏ அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது . இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர்…
The post கல்முனை கடற்கரை பள்ளியின் 201வது கொடியேற்ற விழா ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை கடற்கரை பள்ளியின் 201வது கொடியேற்ற விழா ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
