வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் கிடைந்த இருவர்! வவுனியாவில் சம்பவம்
15 view
வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியில் விவசாய பண்ணைக்கு அருகே) நேற்றிரவு (24.12.2022) வெட்டுக்காயங்களுடன் வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியூடாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சென்று கொண்டிருந்த சமயத்தில் வீதியில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட ஒருவரை நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். அத்துடன் மேலும் ஒருவரும் குறித்தபகுதியில் வெட்டுக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போத்தல்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தினாலே இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாவும் அவர்களின் வயது 50,53 எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் கிடைந்த இருவர்! வவுனியாவில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் கிடைந்த இருவர்! வவுனியாவில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
