மட்டு நகரில் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல்!
21 view
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பின் புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்றது. குறித்த நினைவேந்தலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் அரசியற் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 டிசம்பர் 25ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மட்டு நகரில் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு நகரில் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
