நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள பேக்கரிகள், சிற்றுண்டிச்சாலைகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்
22 view
மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் அடுத்த மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலைகளையும் மூடவேண்டிய நிலை ஏற்படும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை டெங்கு ஒழிப்பு மத்திய நிலையமாக அறிவித்தால், நுளம்பு பெருக்கத்தையாவது கட்டுப்படுத்த முடியும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். கொழும்பில் (டிச. 24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபைக்கு நட்டம் நட்டம் என குறிப்பிடும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபை நட்டமடைவதற்கான காரணத்தை பகிரங்கப்படுத்தவில்லை. நாட்டு மக்களுக்கு இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை என்பதை அமைச்சர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மின்சார கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பாவித்தாலும், குறைந்தபட்ச மின்கட்டணம் 5000 ரூபாவாக காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மின்கட்டண…
The post நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள பேக்கரிகள், சிற்றுண்டிச்சாலைகள்! வெளியான அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள பேக்கரிகள், சிற்றுண்டிச்சாலைகள்! வெளியான அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
