முதலை இழுத்து சென்ற நிலையில் பரிதாபமாக உயிரியிழந்த இளைஞன்!
13 view
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(23) மாலை மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். காணாமல் போன இளைஞனை மீட்பதற்கு நேற்று (24) பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது. இவ்வாறு முதலை பிடியினால் உயிரியிழந்தவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார். The post முதலை இழுத்து சென்ற நிலையில் பரிதாபமாக உயிரியிழந்த இளைஞன்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News…
The post முதலை இழுத்து சென்ற நிலையில் பரிதாபமாக உயிரியிழந்த இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதலை இழுத்து சென்ற நிலையில் பரிதாபமாக உயிரியிழந்த இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
