வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலய பாலன் பிறப்பு
13 view
உலகவாழ் எங்கும் அனுஸ்டிக்கப்படும் நத்தார் யேசுப்பாலன் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் யாழ். மாவட்டத்தில் பெரும்பாலான தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றன. அந்தவகையில் யேசுபாலன் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி வரலாற்று சிறப்பு மிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையிலான அருட்சகோதர்களினால் நடாத்திவைக்கப்பட்டது. இங்கு பூமியில் அவதரித்த யேசுபாலன் மகிமையும் அவர் எதிர்காலத்தின் மக்களுக்கான நெறிப்படுத்தி விட்டுச்சென்ற மகத்துவமான பணிகளின் முக்கியத்தினையும் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அருள் உரையாற்றினார். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
The post வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலய பாலன் பிறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலய பாலன் பிறப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
