பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்!!
13 view
பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்க்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பிரதானமானதாக ஜனாதிபதியின் தலைமையிலான உணவு பாதுகாப்பு வேலை திட்டம் அமைந்திருக்கின்றது. இத் திட்டத்தின் பின்னணியில் பெருந்தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பேசப்படுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட காணிகள் எமது மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை தோன்றியுள்ளது. இதனை தடுப்பதற்கான பொருத்தமான வேலை திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். உணவு பாதுகாப்பிற்காக பிரதேச செயலக மட்டத்திலே குழுக்கள் அமைக்கப்படுகின்றது. அப்பிரதேச செயலக பிரிவில் பயிரிடப்படாது இருக்கின்ற காணிகளை இனம் காண்பதற்கும் அவற்றை தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அக்காணிகளில் பயிரிடுவதற்கு அவசியமான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் இக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அதன் போது, பெருந்தோட்டங்கள் காணப்படும் பகுதிகளில் அங்கு…
The post பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாயம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
