தங்கையை தூங்க வைக்கும் தொட்டிலால் பறிபோன சகோதரன் உயிர்!
7 view
புடவையில் கழுத்து சிக்கி பதினமவயது சகோதரன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் ஹப்புத்தளை பிதரத்மலேவத்த பகுதியில் இடம் பெற்றுள்ளது. தங்கையை தூங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புடவை தொட்டிலில் கழுத்து சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post தங்கையை தூங்க வைக்கும் தொட்டிலால் பறிபோன சகோதரன் உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்கையை தூங்க வைக்கும் தொட்டிலால் பறிபோன சகோதரன் உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
