மது போதையில் யாத்திரைக்கு வந்த பெண் கைது!
16 view
மது போதையில் வாகனம் செலுத்திக்கொண்டு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த யுவதியொருவர் நல்லத்தண்ணி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். அம்பலாந்தொட்ட, கொடகவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய உஷானி மேகலா என்ற யுவதிக்யே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட யுவதி ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பரூக்தீன் முன்னிலையில் குற்றத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து, குறித்த யுவதிக்கு நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் யுவதியின் சாரதி அனுமதி பத்திரத்தை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 18 வயது இளம்பெண் இவ்வாறு மது அருந்தி வணக்க ஸ்தலத்திற்கு வருகை தருவது கண்டனத்திற்குரியது. பெற்றோரின் கவனக்குறைவினாலே இவ்வாறான தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் நீதிபதி விசனம் தெரிவித்துள்ளார்.
The post மது போதையில் யாத்திரைக்கு வந்த பெண் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மது போதையில் யாத்திரைக்கு வந்த பெண் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
