இலங்கை சாரணிய சங்க மாணவர்கள் துவிச்சக்கரவண்டி பவனி!
19 view
இலங்கை சாரணிய சங்கம் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு 110 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இலங்கையில் இருக்கின்ற 37 சாரணிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டி பவனி ஆரம்பமானது. இன்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் துவிச்சக்கர பவனி ஆரம்பமாகி யாழ். ஆரியகுளம் வீதி ஊடாக சென்று, பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை வீதி ஊடாக சென்று வைத்தீஸ்வரா பாடசாலையில் நிறைவு பெற்றது. இந் நிகழ்வில் இலங்கை சாரணர் சங்க தலைமை காரியாலய ஆணையாளர் (வடக்கு கிழக்கு) திரு .ப அஜித்குமார், யாழ். மாவட்ட சாரணர் கிளை சங்க செயலாளர் செ.தேவறஞ்சன், இலங்கை சாரணர் சங்கம் தவிசாளர் பி.என் சுதர்சன், பெருந்திரளான சாரணிய மாணவர்கள் மற்றும் சாரணிய ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை சாரணிய சங்க மாணவர்கள் துவிச்சக்கரவண்டி பவனி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை சாரணிய சங்க மாணவர்கள் துவிச்சக்கரவண்டி பவனி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
