இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் -செல்வம் எம். பி .திட்டவட்டம் !
17 view
ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(23) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,, இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜனாதிபதியின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே. எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் ராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்து நிலங்கள் அபகரிக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானமாக அதைச் சொல்லி இருந்தோம். அந்த அடிப்படையில் ஜனாதிபதி இந்த 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் கேட்டிருந்தார். அந்த வகையில் இராணுவம் எந்தெந்த இடங்களை விடப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது. பேச்சுவார்த்தையின் போது நாங்களும் இந்த ராணுவம் கைப்பற்றிய சில…
The post இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் -செல்வம் எம். பி .திட்டவட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் -செல்வம் எம். பி .திட்டவட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
