யாழ் உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைப்பு: நள்ளிரவில் சம்பவம்!
6 view
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர். சேதப்படுத்திய காட்சி அங்கு வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழ் உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைப்பு: நள்ளிரவில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் உதயபுரம் பகுதியில் படகிற்கு தீ வைப்பு: நள்ளிரவில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.