உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு!
6 view
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
