பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற அல்பேனிய குற்றவாளிகள்!
10 view
பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற 40க்கும் மேற்பட்ட அல்பேனிய குற்றவாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் பிரித்தானியாவின் நவீன அடிமைச் சட்டங்களை அப்பட்டமாக கையாளுதல் செய்வதாக கடந்த மாதம் தேசிய குற்றவியல் நிறுவனம் எச்சரிக்கை செய்தது. மேலும், அல்பேனிய கும்பல்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுத்த, சிறிய படகு மூலம் மக்களை கால்வாய் வழியாக கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியது. பிரித்தானியாவில் உள்ள அல்பேனியர்களில் கணிசமான பகுதியினர் சட்டவிரோதமாக இங்கு வந்திருக்க வாய்ப்புள்ளது என NCA துணை இயக்குனர் ஆண்ட்ரியா வில்சன்(Andrea Wilson) கூறினார். இந்த நிலையில், அல்பேனிய குற்றவாளிகள் 32 பேர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்றுள்ளனர். நாடு கடத்தல் அவர்கள் அனைவரும் உள்துறை அலுவலக அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர். பின்னர் விமானம் மூலம் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.…
The post பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற அல்பேனிய குற்றவாளிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானியாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற அல்பேனிய குற்றவாளிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
