யாழில் அதிகரிக்கும் 'பல்ப்' திருடர்கள்..!
13 view
யாழ்.வல்லை பகுதியில் வலி,கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோலார் மின் விளக்குகள் களவாடப்பட்டுள்ளது. மின் விளக்குகளின் சில பாகங்கள் மட்டும் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபையினால் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது. தற்போதைய சூழலில் ஒரு சோலார் மின் விளக்கின் பெறுமதி 2 லட்சம் ரூபாயாக உள்ளது. தொடர்ச்சியாககளவாடி வரும் நிலையில், வல்லை வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினா், பொலிஸாா் கூட கண்காணித்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை என பிரதேசசபைகள் பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளன. அண்மையில் கரவெட்டி பிரதேசசபையினால் பொருத்தப்பட்ட மின் விளக்குகளும் களவாடி செல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி விடயம் தொடா்பாக வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளா் தியாகராஜா நிரோஷை தொடா்பு கொண்டு கேட்டபோது, நாட்டில் தற்போது பொருட்களின் விலையேற்றம் கணிசமாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஒரு விளக்கு 2 லட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்கிறோம். அதனை அடியோடு வெட்டி எடுத்துச் செல்வது வேதனையான விடயம். பொதுமக்களின்…
The post யாழில் அதிகரிக்கும் 'பல்ப்' திருடர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் அதிகரிக்கும் 'பல்ப்' திருடர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
