மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வசமாக சிக்கிய 47 பேர்!
14 view
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் இருந்து 01 கிலோ 260 கிராம் மாவா, 09 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின், 02 கிராம் 38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் 590 மில்லி கிராம் கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வசமாக சிக்கிய 47 பேர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வசமாக சிக்கிய 47 பேர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
