காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய்
13 view
யாழ்.காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து இராணுவ சிப்பாய் ஒருவர் கொலைஅச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது. இன்று காலை காரைநகர் – சாம்பல் ஓடை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும்தெரியவருவதாவது, தொழிலாளி ஒருவர் கருவாடு உலர வைத்துக்கொண்டிருந்தவேளை அப்பகுதிக்கு வந்த இராணுவ சிப்பாய்ஒருவர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் தொழிலாளியால், காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்திற்கும் , அப்பகுதி கிராமசேவையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். குறித்த சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாகபவும் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாகவும் காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். The post காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
