5000 பாடசாலை மாணவர்களுக்கு சிறைத்தண்டனை:வெளியான அதிர்ச்சி தகவல்

6 view
போதைப்பொருள் பயன்படுத்தி சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரமாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லாத சுமார் 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது 2021 இல் 190 ஆகக் குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். இருப்பினும், சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக இருந்ததுடன் 2021 ஆம் ஆண்டு ஆகும் போது 5000 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 2020ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.  The post 5000 பாடசாலை மாணவர்களுக்கு சிறைத்தண்டனை:வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on Today Jaffna News – Jaffna Breaking…
The post 5000 பாடசாலை மாணவர்களுக்கு சிறைத்தண்டனை:வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース