இந்த அரசு இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை! – பொன்சேகா தெரிவிப்பு
11 view
“வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசால் மீட்டெடுக்க முடியாது. இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை.” – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “எமது நாடு வங்குரோத்து அடைந்த நாடு என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிடம் எமது நாடு கடன் பெற்றுள்ளது. அந்தக் கடனை மீளச் செலுத்திக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இதனால் நாட்டு மக்களால் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதார செலவீனம் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. தொழில்வாய்ப்பற்ற நிலைமைகள் உருவாகியுள்ளன. தொழிற்றுறைகள் செயலிழந்துள்ளன. நாட்டில் மந்தபோசனை பிரச்சினை என்பது தீவிர நிலைமையை அடைந்துள்ளது. மந்தபோசனையால் ஒரு இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கு 50 வீதமானோர் மூன்று வேளைகளும் உணவு…
The post இந்த அரசு இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை! – பொன்சேகா தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த அரசு இருக்கும் வரைக்கும் நாட்டுக்கு மீட்சி இல்லை! – பொன்சேகா தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
