யாழில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் ஒருவர் கைது
11 view
பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ்.நாவற்குழி படைமுகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பொல்பித்திகம நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. பொது இடத்தில் புகைப்பிடிக்கவேண்டாம். என அறிவுரை வழங்கியமையே தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது சந்தேக நபரான இராணுவ வீரர் (20) யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள முகாமில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் (21) பொல்பதிகம நகரில் உள்ள ஹோட்டல்களை சோதனையிட்ட போது, ஹோட்டல் ஒன்றில் குறித்த இராணுவ சிப்பாய் புகை பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. The post யாழில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் ஒருவர் கைது appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post யாழில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
