வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
11 view
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, 24 மற்றும் 25ம் திகதிகளில் இலங்கையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அன்றைய தினங்களில் பல பிரதேசங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய மற்றும் தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55 தொடக் கம் 65 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. The post வங்ககடலில்…
The post வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
