25ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் மாற்றம்..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
11 view
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் (07N – 15N, 80E – 85E) தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு…
The post 25ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் மாற்றம்..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 25ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் மாற்றம்..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
