ஹோட்டலில், இரவு உணவு உண்ட 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

16 view
மத்துகமவில், உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்விச் சுற்றுலாவிற்குச் சென்ற மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை  இரவு வரக்காபொலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு உட்கொண்டுள்ளனர். ஹோட்டலில் இரவு உணவு உட்கொண்ட பின்னரே மாணவர்கள் திடீர் சுகயீனத்திற்கு உள்ளாகியுள்ளதாக மத்துகம பொலிஸhர் தெரிவித்தனர். குறித்த கல்விச் சுற்றுலாவில் தரம் 1-9 இல் கல்வி பயிலும் 240 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் கண்டியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த்  நிலைமையை எதிர்கொண்டனர். இரவு உணவுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்ட மாணவர்களுக்கு இரவு உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் பெரும்பாலான மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…
The post ஹோட்டலில், இரவு உணவு உண்ட 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース