இலங்கைக்கு இந்தியத் தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு – மனோ அணியின் தீர்மானம்!
19 view
மலையகம் – 200′ என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணி நடத்தும். இதில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது பற்றி மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:- “இலங்கை – இந்திய மலையகத் தமிழர், இலங்கைக்கு வந்த 1823 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 200 வருடங்களாக இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பை ஆராய்வு செய்து அங்கீகரிக்க, அமைச்சரவைப் பத்திரம் மூலம் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக தீர்மானித்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை, இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்நாட்டில் மிகவும்…
The post இலங்கைக்கு இந்தியத் தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு – மனோ அணியின் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு இந்தியத் தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு – மனோ அணியின் தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
