6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே?- தனேந்திரன் கேள்வி!
7 view
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன், 25 வருடங்களாக பொது கூட்டம் கூட்டாமல் ஆலயத்தை வைத்திருப்பதன் பின்னணி தொடர்பாகவும் சந்தேகம் வெளியிட்டார். யாழ், ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து வியாபாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த நாட்டுக்கோட்டை செட்டிமார், தங்களிடையே வரி வசூலித்து யாழ்நகரில் காங்கேசன்துறை வீதியில் கதிரேசன் கோயில் எனும் முருகன் கோயிலை வியக்கத்தக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் கருங்கல்லால் கட்டி1931 ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து அந்த கோயிலை தொடர்ந்தும் நிர்வகித்தும் வந்தனர். 40 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணம் கதிரேசன் கோயிலை நிர்வகித்து வந்த நாட்டுக்கோட்டை செட்டிமார் அந்த காலப்பகுதியில் அப்போதைய பெறுமதியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அதாவது…
The post 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே?- தனேந்திரன் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே?- தனேந்திரன் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
