மலையகத்தில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி!!
14 view
நுவரெலியா – இராகலை 2ஆம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீடுகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 14 வீடுகளைக் கொண்ட குறித்த லயக் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையானது. இதனால் 14 குடும்பங்களை சேர்ந்த 60 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகினர். மேலும், இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் ஒன்றரை வருடங்களாக குறித்த கூடாரங்களில் பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லானது, 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டப்பட்டு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வீடமைப்பு பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இவர்கள் வாழும் தற்காலிக கூடாரங்களில்…
The post மலையகத்தில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையகத்தில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் நிர்க்கதி!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
