நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பு!

11 view
நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நத்தார் தின ஆராதனைகள் மற்றும் அது தொடர்பான விசேட வைபவங்கள் இடம்பெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில், தேவாலயங்களுக்கு பொறுப்பான அருட்தந்தையர்களை சந்தித்து, கலந்துரையாடி அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், தேவாலயங்களுக்குள் பிரவேசிக்கும் இனந்தெரியாத நபர்களை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
The post நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース