பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்ட முடிவு! – ஜனவரி முதல் தொடர்ந்து பேச்சுக்கள்
13 view
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் தொடர்ந்து நான்கு நாள்கள் பேச்சுக்களை நடத்தித் தீர்வுக்கானத் தீர்மானங்களை எட்டுவது என்றும் நேற்று முடிவு செய்யப்பட்டது. நேற்று மாலை 6:15 முதல் 7 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் அரசு தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் பங்குபற்றினர். தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசியல் கைதிகள் விவகாரம் பதினன்கு கைதிகள் குற்ற தீர்ப்பு…
The post பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்ட முடிவு! – ஜனவரி முதல் தொடர்ந்து பேச்சுக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்ட முடிவு! – ஜனவரி முதல் தொடர்ந்து பேச்சுக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
