இலங்கையில் 58 பிரிவுகள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம்! – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
12 view
நாட்டின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 58 பிரிவுகளை அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 72 ஆயிரத்து 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
The post இலங்கையில் 58 பிரிவுகள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம்! – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 58 பிரிவுகள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம்! – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.