போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை தென்கிழக்குப் பல்கலையில் கைச்சாத்து!

14 view
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சாரப் பீடத்திற்கும் இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்திற்கும் (ADIC) இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தமானது  “பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வையும் அறிவையும் ஊட்டி, பிராந்திய, சமூக பிரச்சினைகளை கையாளச் செய்தல்” எனும் கூட்டு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் பாஸில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இப்புரிந்துணர்வு உடன்படிக்கையினூடான நிகழ்ச்சித்திட்டமானது சமூகவியல் துறை மாணவர்களை வலுவூட்டுவதை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வின் வரவேற்புரையினை சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.எம் அய்யூப் நிகழ்த்தினார். பின்னர் ஒப்பந்தம் தொடர்பான பின்புலத்தை உணவு மற்றும் ஔடத முன்னாள் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, தலைமை உரையினை பீடாதிபதி பேராசிரியர்…
The post போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை தென்கிழக்குப் பல்கலையில் கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース