IMFன் ஆதரவைப் பெறுவதற்கு காத்திருக்கும் இலங்கை! மத்திய வங்கி ஆளுநர்
14 view
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவிக்கான உத்தரவாதத்திற்காக இலங்கை காத்திருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை கடந்த சில மாதங்களாக, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய, மூன்று முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களுடன், கடன் மறுகட்டமைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இந்தநிலையில் அந்த நாடுகள், விரைவில் சாதகமான பதிலை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்காலிக உடன்படிக்கையில் நுழைந்த காலத்திலிருந்து, சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை இந்தியா அடிக்கோடிட்டுக் காட்டியதாக தெரிவித்துள்ளார். இலங்கை இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டிருந்தாலும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இழுத்தடிக்கப்பட்டதால், அது தோல்வியடைந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அக்டோபரில் நடைபெற்றமை…
The post IMFன் ஆதரவைப் பெறுவதற்கு காத்திருக்கும் இலங்கை! மத்திய வங்கி ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IMFன் ஆதரவைப் பெறுவதற்கு காத்திருக்கும் இலங்கை! மத்திய வங்கி ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
