வீதியில் நின்று கொண்டிருந்த வாகனம் திடீர் தீப்பற்றல்!! வாதுவையில் சம்பவம்!
13 view
வாதுவ நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வான் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி சார்ஜரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்ததாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை நகர சபையின் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஓட்டுநர் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக வேனில் வைத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. எனினும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. குறித்த தீ விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.
The post வீதியில் நின்று கொண்டிருந்த வாகனம் திடீர் தீப்பற்றல்!! வாதுவையில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதியில் நின்று கொண்டிருந்த வாகனம் திடீர் தீப்பற்றல்!! வாதுவையில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
