புத்தளம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என நம்பிக்கை உள்ளது – அலிசப்ரி ரஹீம்!
17 view
புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் நிதி ஒதுக்கீடு மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் மௌலவி என்.எம்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலந்து கொண்டதுடன், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் கூறியதாவது, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…
The post புத்தளம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என நம்பிக்கை உள்ளது – அலிசப்ரி ரஹீம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என நம்பிக்கை உள்ளது – அலிசப்ரி ரஹீம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
