மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக விஷேட மேற்பார்வைக் குழுக்கள் நியமனம்!
7 view
பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளிலும் கண்காணிப்புக் குழுக்களை நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேற்பார்வைக் குழுக்கள் நிறுவப்படாத பாடசாலைகளில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் குழுக்களை நிறுவி முடிக்குமாறு கம்பஹா கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க இன்று (21) பணிப்புரை வழங்கினார். கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (21) காலை கம்பஹா பிராந்திய செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. அங்கு கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கம்பஹா பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என கம்பஹா பிரதேச கல்விப் பணிப்பாளர் மற்றும் பொலிஸாரிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த கம்பஹா கோட்டக் கல்விப் பணிப்பாளர், கண்காணிப்புக்…
The post மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக விஷேட மேற்பார்வைக் குழுக்கள் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக விஷேட மேற்பார்வைக் குழுக்கள் நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
