யாழ் ஓ.எம்.பி அலுவலகத்தில் இதுவரை 77 பேர் பதிவு!

9 view
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 77 பேர், தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண ஓ.எம்.பி அலுவலகத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக ஓ.எம்.பி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன ஆட்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதோடு ஒரு சிலர் அதிகாரிகளிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு பயணக்கொடுப்பனவாக ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
The post யாழ் ஓ.எம்.பி அலுவலகத்தில் இதுவரை 77 பேர் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース