ஒரு தமிழருக்கும் இடமில்லாத உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம்; அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ அதிருப்தி!
13 view
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு. ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது. அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது, அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.…
The post ஒரு தமிழருக்கும் இடமில்லாத உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம்; அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு தமிழருக்கும் இடமில்லாத உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம்; அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
