பெரமுன முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி ரணில் விசேட அறையில் இரகசிய சந்திப்பு

16 view
நேற்றிரவு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஷங்ரிலா ஹோட்டலில் பிரமாண்டமான திருமண நிகழ்வும் இடம்பெற்றது. பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமணமான இதில் முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர் . திருமண வைபவம் நடைபெற்ற மண்டபத்தை ஒட்டியிருந்த விஐபி அறையில் நடைபெற்ற விசேட அரசியல் கலந்துரையாடல் இங்கு பலரின் கவனத்தை ஈர்த்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பொதுஜன பெரமுன செயலாளர் நாயகம் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நீடித்ததுடன், அவர்கள் அனைவரும் அங்கு இரவு உணவையும் சாப்பிட்டதாக தெரியவருகிறது.  அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் மற்றுமொரு சூப்பர் திருமண வைபவம் இன்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
The post பெரமுன முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி ரணில் விசேட அறையில் இரகசிய சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース