சடலமாக மீட்கப்பட்ட இருபது வயது யுவதி – விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்
7 view
அத்தனகல்ல – தன்விலான பிரதேசத்தில் , பின்னகொல்ல பகுதியில் தனிமையில் இருந்த இருபது வயது யுவதியொருவரின் சடலமொன்று 18 ஆம் திகதி இரவு அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து வெயாங்கொடை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் வத்துபிட்டிய ரணவிருகம பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நேற்று காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்ததையடுத்து, அத்தனகல்ல பதில் நீதவான் பின்னகொல்லவில் உள்ள முட்புதரில் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த யுவதி தங்கியிருந்த வயங்கொடை தன்விலான பகுதிலுள்ள வீட்டிற்குச் சென்று நீதவான் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், யுவதி தனியொரு அறையில் தனிமையில் தங்கியிருப்பதும், காதலனால் மூன்று வேளை உணவும் எடுத்து வரப்பட்டமையும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மனைவியை விட்டு பிரிந்த திருமணமான இளைஞனுடன் யுவதி காதல் தொடர்பிலிருந்த நிலையில் யுவதியின் காதலன் அந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இளைஞனை அண்மையில் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக…
The post சடலமாக மீட்கப்பட்ட இருபது வயது யுவதி – விசாரணையில் வெளிவந்துள்ள தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சடலமாக மீட்கப்பட்ட இருபது வயது யுவதி – விசாரணையில் வெளிவந்துள்ள தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
