கைது செய்வோம்..! – யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மிரட்டிய அதிகாரி
17 view
யாழ்ப்பாணம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன் இன்று காலை 09.00 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தின் போது அதிகாரியொருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அவர் தெரிவிக்கையில், சேவை செய்கின்ற இடத்தில் ஆட்களை வர சொல்லியுள்ளோம். உங்களுக்கு சேவை விருப்பம் எனின் சத்தம் போடாமல் இந்த சேவையினை முடித்து விட்டு போகலாம். இல்லையேல் இந்த போராட்டத்தை வெளியில் சென்று செய்துகொள்ளலாம். இதற்குள் வந்து எந்த சத்தமும், சேட்டையும் செய்யக் கூடாது. ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக இருந்தால் வெளியில் சென்று செய்துகொள்ளுங்கள். இங்கே இடம்பெறுகின்ற வேலையினை நிறுத்துவதாக கூறினால், எங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி உங்களை கைது செய்ய முடியும் என கடும் தொனியில் பேசியுள்ளார். இது குறித்து வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வேலை செய்ய வந்தவர்களிடம் முரண்பட்டு அவர்களை…
The post கைது செய்வோம்..! – யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மிரட்டிய அதிகாரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைது செய்வோம்..! – யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மிரட்டிய அதிகாரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
