திருமலையில் திடீரென மாயமான வீதிகள்! அதிர்ச்சியடைந்த மக்கள்!
7 view
சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் – நல்லூர் பிரதான வீதி உடைவடைந்து வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றது. இதனால் தோப்பூர் – நல்லூர் வீதியூடாக கனரக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இந்த மழையுடனான காலநிலை மேலும் தொடருமாக இருந்தால் இன்னும் இவ்வீதி சேதமடைந்து தோப்பூர் – நல்லூர் வீதியுடனான தரைவழிப் போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
The post திருமலையில் திடீரென மாயமான வீதிகள்! அதிர்ச்சியடைந்த மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் திடீரென மாயமான வீதிகள்! அதிர்ச்சியடைந்த மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
