வவுனியாவில் கூட்டமாக வீதிக்கு இறங்கிய யானைகள் – பயணிகள் அசௌகரியம்

16 view
வவுனியா, புளியங்குளம், நெடுங்கேணி பகுதியில் யானைகள் பல கூட்டமாக வீதிக்கு வந்தமையால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். நேற்று மாலை 5.30  மணியளவில் வீதிக்கு வந்த யானை சுமார் 20 நிமிடங்கள் அப்பகுதியில் நடமாடிவிட்டு பின்னர் காட்டுக்குள் சென்றது.  நான்கு யானைகள் குட்டிகளுடன் வீதிக்கு வந்தமையால் அச்சமடைந்த பயணிகள் தமது வாகனங்களை திருப்பி வந்த திசை நோக்கிச் சென்றனர். சிலர் தூர விலகி நின்றனர். யானை தானாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற பின்னர் பயணிகள் தமது பயணத்தை தொடர்ந்திருந்தனர்.  அண்மைக்காலமாக நெடுங்கேணி பகுதியில் அவ்வப்போது மாலை வேளைகளில் வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
The post வவுனியாவில் கூட்டமாக வீதிக்கு இறங்கிய யானைகள் – பயணிகள் அசௌகரியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース