நுவரெலியா பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் சோதனை!
13 view
நுவரெலியா நகரில் உள்ள பிரதான பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் நுவரெலியா நகருக்கு சுற்றுலா வரும் பாடசாலை பஸ்கள் என்பன போக்குவரத்து போலீசாரால் நேற்று கடுமையாக பரிசோதிக்கப்பட்டன. பாடசாலை மாணவர்களை போதைப் பொருளிலிருந்து மீட்டெடுப்பதற்காக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, என்று நுவரெலியா போலீஸ் தலைமையகத்தின் பிரதான போலீஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு அமைய பாடசாலை அதிபர்களின் அனுமதியுடன் நுவரெலியா போலீஸ் மோப்பநாய் பிரிவில் துணையுடன் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போதை பொருள் பாவணையின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் போலீசார் மாணவர்களுக்கு தெளிவூட்டலும், பாடசாலைகளில் போதை பொருள் பாவனை தொடர்பில் அறியக்கிடைத்தால் அதிபருக்கு போலீசாருக்கும் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. என்று
The post நுவரெலியா பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் சோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியா பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் சோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
