பிள்ளைகளின் பாடசாலைப் பைகளைச் சோதனையிடும்போது 'வெற்று ' உணவுப் பெட்டிகள் மட்டுமே கண்டுபிடிப்பு- சஜித் கவலை!
21 view
“தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு எனப் புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலைக் கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக,பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளைப் போதைப்பொருளுக்காகத் தற்போதைய அரசு சோதனை செய்கின்றது. இதன்போது போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைக்கின்றது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளைச் கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளைச் சோதனை செய்வது வேடிக்கையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் ஒன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பாடசாலை…
The post பிள்ளைகளின் பாடசாலைப் பைகளைச் சோதனையிடும்போது 'வெற்று ' உணவுப் பெட்டிகள் மட்டுமே கண்டுபிடிப்பு- சஜித் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளைகளின் பாடசாலைப் பைகளைச் சோதனையிடும்போது 'வெற்று ' உணவுப் பெட்டிகள் மட்டுமே கண்டுபிடிப்பு- சஜித் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
