இரத்தினபுரி கடகரெல்ல பாலத்துக்கு அருகில் உருக்குலைந்த சடலம் மீட்பு!
10 view
இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய போலீசார் தெரிவித்துள்ளார். 48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாணந்துறை ரத்தினபுரி வீதியில் பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாதா ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டது தொடர்பில் ஒருவர் இங்கிரிய போலீசாருக்கு அறிவித்தமை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாடகை வாகனத்தில் சென்ற தனது சகோதரர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என உயிரிழந்தவரின் சகோதரர் மினுவாங்கொடபோலீசில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து இங்கிரிய போலீசாரால் சடலம் ஒன்று இருப்பதாக அறிவித்ததன் பேரில் ஹொரண வைத்தியசாலைக்கு சென்று அவரது சகோதரர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post இரத்தினபுரி கடகரெல்ல பாலத்துக்கு அருகில் உருக்குலைந்த சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரத்தினபுரி கடகரெல்ல பாலத்துக்கு அருகில் உருக்குலைந்த சடலம் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
