மலையக இளைஞர் தன்னைத்தானே கத்தியால் குத்தி விபரீத முடிவு!
7 view
மஸ்கெலியா, நல்லதண்ணி போலீஸ் பிரிவுக்குட்பட்ட லட்ஷ்சபான தோட்டத்தில் வாழமலை பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு குடும்ப தகராறு காரணமாக விபரீத முடிவை எடுத்துள்ளார். இவர் கத்தியால் தனது வயிற்றுப் பகுதியை குத்திக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மஸ்கலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அதி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post மலையக இளைஞர் தன்னைத்தானே கத்தியால் குத்தி விபரீத முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக இளைஞர் தன்னைத்தானே கத்தியால் குத்தி விபரீத முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
